ஆவடி: கோயம்பேடு பகுதியில் ஆட்டோ ஓட்டிக்கொண்டே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது
சென்னை கோயம்பேடு சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக இன்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார் ஆட்டோ ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த ஆட்டோவில் இரண்டு கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்ததால் உடனே ஆட்டோ ஓட்டுனரை கைது செய்தனர்.