முசிறி: முசிறி, தொட்டியம் பகுதியில் காவிரி ஆற்றில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்பணம் செய்து வழிபாடு
திருச்சி மாவட்டம், முசிறி, தொட்டியம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் பொதுமக்கள் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் செய்து வழிபட்டனர். தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசை ஆகிய நாட்களில் இந்துக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கம்.