வேடசந்தூர் தாலுகா வடமதுரை அருகே உள்ள சீலப்பாடியான் களம் பகுதியைச் சேர்ந்தவர் ராமர்பாண்டி. இவர் அதே பகுதியில் உள்ள ஒரு கடையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சீலப்பாடியான்களம் பிரிவு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் இரவு உணவு வாங்கி விட்டு சாலையை கடந்துள்ளார். கோவிந்தராஜ் என்பவர் ஓட்டி வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வடமதுரை போலீசார் விசாரணை.