வேடசந்தூர்: ஆத்துமேட்டை ஸ்தம்பிக்க வைத்த "மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்" பிரச்சாரம்
தமிழகம் முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சாரம் செய்து வருகிறார். அதன்படி வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு வருகை புரிந்த அவருக்கு ஏராளமான பொருட்கள் கூடி ஆதரவு அளித்தனர். வேடசந்தூர் நகர் பகுதி முழுவதும் பொதுமக்களின் கூட்டத்தால் ஸ்தம்பித்தது. திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் எம்எல்ஏக்கள் டாக்டர் பரமசிவம், தென்னம்பட்டி பழனிச்சாமி, மற்றும் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டணி கட்சியைச் சேர்ந்த தாமாக, பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.