திருவொற்றியூர்: திருவொற்றியூர் கே வி கே குப்பத்தில் மறைந்த திமுக நகர அவை தலைவர் பரசுராமனின் 33வது நினைவு நாளை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு அன்னதானம்
திருவொற்றியூர் கே வி கே குப்பம் பகுதியில் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மறைந்த முன்னாள் திமுக நகர அவை தலைவர் கே பரசுராமனின் 33 வது நினைவு நாளை முன்னிட்டு திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி ஷங்கர் மற்றும் ஐந்தாவது வட்ட செயலாளர் கே பி சொக்கலிங்கம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தி ஆயிரம் ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்கினர். திமுக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தி அன்னதானத்தை வழங்கினர்