வேடசந்தூர்: காப்பிலியபுரத்தில் அருவாள் மீது ஏறி நின்று குறி சொன்ன பூசாரி
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா ஆர்.புதுக்கோட்டை ஊராட்சி காப்பிளியபுரத்தில் பிரசித்தி பெற்ற 18 கை வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பிரதி செவ்வாய் வெள்ளி தோறும் மற்றும் பௌர்ணமி அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். இதனைத் தொடர்ந்து மகாளயபட்ச்ச அமாவாசை நாளை ஒட்டி கோவிலின் பூசாரி காளிதாஸ் அருள் வந்து ஆட்டம் ஆடி அதன் பிறகு அரிவாளில் நின்று பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறினார். இதில் கோவை பொள்ளாச்சி உடுமலை கரூர் திருச்சி தேனி என பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்தனர்.