திருவள்ளூர்: மணவாளநகரில் 55 கிராம் மெத்தபெட்டமைன் கடத்தி வந்த பிரபல டான்சர் கைது
சென்னை ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் சிபிராஜ் என்பவர் நடன கலைஞராக உள்ளார். இவர் ஈக்காடுதாங்கல் பகுதியில் நடனப் பயிற்சி அளிக்கும் டான்ஸ் கிளாஸ் நடத்தி வருகிறார்,இந்த நிலையில் இன்று காலை திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த சிபிராஜை மடக்கி சோதனை செய்ததில் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள 55 கிராம் மதிப்புள்ள மெத்தம்பெட்டமின் கடத்தி வந்ததைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்,