கள்ளக்குறிச்சி: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை இந்தியா மிஷன் 2.0 உறுதிமொழி ஏற்பு - சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று (செப். 19) தூய்மை தமிழ்நாடு இயக்கம் சார்பில் தூய்மை இந்தியா மிஷன் 2.0 உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா தலைமை வகித்தார். இதில், சட்டமன்ற உறுப்பினர்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.