திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ளது சிறுமலை சமீபத்தில் தமிழக முதல்வர் சிறுமலை வனப்பகுதியில் உள்ள பள்ளியில் பூங்காவினை திறந்து வைத்தார் இதனால் சுற்றுலா பயணிகள் சிறுமலைக்கு படை எடுக்க துவங்கியுள்ளனர் இந்நிலையில் பொங்கல் திருநாள் மாட்டுப் பொங்கல் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு திண்டுக்கல் சிறுமலைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.