திருத்தணி: திருவாலங்காட்டில்  ரயில் இன்ஜின் கோளாறால் நடுவழியில் நிறுத்தம் பயணிகள்  அவதி
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அருகே பெங்களூரில் இருந்து சென்னை செல்லக்கூடிய லால்பார்க் எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் அரக்கோணம் வழியாக சென்னை நோக்கி சென்றபோது இன்ஜின் கோளாறு ஏற்பட்டு திருவாலங்காடு ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தப்பட்டது.இதனால் ரயில் பயணிகள் ரயிலில் இருந்து இறங்கி திருவாலங்காடு ரயில் நிலையம் சென்று மாற்று ரயிலில் செல்வதற்காக தண்டவாளத்தில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டது,மாற்று இஞ்சின் வரவழைக்கப்பட்டு ஒரு மணி நேரம் தாமதமாக சென்னைக்கு புறப்பட்டு சென்றது.