திருச்சி: பாலக்கரை அருகே விற்பனைக்காக போதை மாத்திரை வைத்திருந்த பெண் கைது
திருச்சி பாலக்கரை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாலக்கரை அருகே பென்ஸ் கிரௌண்ட் பகுதியில் தெய்வம் என்ற பெண் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தார். உடனே போலீசார் அந்த பெண்ணை பிடித்து சோதனை செய்ததில் அவரிடம் விற்பனைக்காக தடை செய்யப்பட்ட போதை மாத்திரை இருப்பது கண்டறியப்பட்டது.