கோவை வடக்கு: கோவையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை: வெள்ளத்தில் மூழ்கிய சாலைகள், மின்வெட்டால் மக்கள் அவதி
கோவையில் கடந்த 2 மணி நேரத்திற்கும் மேலாகப் பெய்து வரும் கனமழையால் பல்வேறு சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு, மின்வெட்டாலும் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.