வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியம் கோவிலூர் ஊராட்சி ராமநாதபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.காந்திராஜன் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். இம்முகாமில் இருதயம், காது, மூக்கு, தொண்டை, பல், எலும்பு போன்ற 17 துறை சார்ந்த மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு துறை சார்ந்த சிகிச்சை அளித்தனர். இதில் 1500 ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சை பெற்றனர்.