பாலக்கோடு: சிக்கார்தனஅள்ளியில் கரக செல்லியம்மன் கோயில் நிலம் போலீசார் முன்னிலையில் அளவீடும் பணி தொடக்கம்
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சிக்கார்தனஅள்ளி கரகசெல்லியம்மன் கோயில் நிலம் அளவீடும் பணி பாலக்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம், இந்து அறநிலைய துறை தாசில்தார் லட்சுமி, இந்து அறநிலைய துறை ஆய்வாளர் கோமதி மற்றும் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் கோயிலுக்கு சொந்தமான 33 ஏக்கர் 42 சென்ட் நிலம் அளவீடும் பணி நடைபெற்று வருகிறது. நிலம் அளவீடும் பணி நிறைவடைந்ததும் கோயில் நிலம் பொது ஏலம் விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.