வேடசந்தூர்: ஆத்துமேட்டில் எடப்பாடி பழனிச்சாமி பேசும் இடத்தை ஆய்வு செய்த முன்னாள் அமைச்சர் சீனிவாசன்
தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வருகின்ற 25-ம் தேதி வேடசந்தூருக்கு வருகை தரஉள்ளார். இதனை அடுத்து வேடசந்தூர் தொகுதி அதிமுகவின் சார்பில் ஆத்துமேடு கரூர் ரோட்டில் ஸ்டேட் பேங்க் அருகில் தேர்வு செய்யப்பட்ட இடத்தை அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநில பொருளாளருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் நேரில் ஆய்வு செய்தார். பின்பு வாகனங்களுக்கு புரட்சித் தமிழரின் எழுச்சி பயணம் என்னும் ஸ்டிக்கர் ஒட்டும் பணியை தொடங்கி வைத்தார்.