சாத்தான்குளம்: அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதுமைப்பெண் திட்ட துவக்க விழா நடைபெற்றது
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதுமைப்பெண் திட்டம் துவக்க விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு சாத்தான்குளம் கல்விக்கழக தலைவர் ஜோசப் தலைமை வகித்தார். தொடர்ந்து, கல்லூரி மாணவிகள் 210 பேருக்கு மாதம் தோறும் உதவித் தொகை வழங்கும் வங்கி கணக்கு அட்டை வழங்கப்பட்டது. இதில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.