நிலக்கோட்டை: திண்டுக்கல் வருகை தரும், முதலமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜகவினர் கொடைரோடடில் GO BACK STALIN என, ஒட்டப்படும் போஸ்டரால் பரபரப்பு
மாவட்டத்தில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகளையும், புதிய திட்டப் பணிகளை துவங்கி வைக்க திண்டுக்கல்லுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தருகிறார். கிழக்கு மாவட்ட பாஜக இளைஞர் அணி சார்பில் கொடைரோடு, அம்மையநாயக்கனூர் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திண்டுக்கல் செல்லும் வழியோர சாலைகளில் உள்ள மின் கம்பங்கள், டீக்கடைகள், பொது இடங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இரவு நேரத்தில் GO BACK STALIN என, போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது