திண்டுக்கல் கிழக்கு: நகர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் 6 மணி நேரத்திற்கு மேலாக விட்டு விட்டு மழை - பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களுக்கு மேல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டிருந்தது.திடீரென்று மாலை 4 முதல் இரவு 10 மணி வரை விட்டு விட்டு மழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டத்தை பொருத்த வரையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மழையின் அளவு குறைவாகவே காணப்பட்டு வருகிறது.