ஸ்ரீவைகுண்டம்: மேல பூவானி அருகே ஓடையில் இறங்கி மக்கள் போராட்டம்
பூவானி அருகே உள்ள மேல பூவாணி கிராமத்தில் குளத்திற்கு நீர் வரும் ஓடை பாதையில் ஒரு தனியார் காற்றாலை கம்பெனி ஆக்கிரமித்து பாதை அமைத்து வருகிறது. இதனால் குளத்திற்கு தண்ணீர் வருவது தடைபடும். இதனை கண்டித்து மேல பூவாணி கிராம மக்கள் ஓடையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.