திருப்பத்தூர்: திருவைரவன்பட்டியில் தேய்பிறை அஷ்டமி பெருவிழா-சாம்பல் பூசணி அகல் விளக்கேற்றி பக்தர்கள் வழிபாடு
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே திருவைரவன்பட்டியில் ஸ்ரீமூலபால கால பைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பெருவிழா நடைபெற்றது. புரட்டாசி மாதத்தில் வியாதி, கடன் நீங்க வழிபாடு செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். மகா கணபதி பூஜை, மகா பைரவயாகம், கோ பூஜை, வேதமந்திரங்களுடன் புஷ்பயாகம், மகாபூர்ணாகுதி நடைபெற்றன. பக்தர்கள் சாம்பல் பூசணி, அகல் விளக்கேற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்னதானமும் வழங்கப்பட்டது.