வேடசந்தூர்: அரசு ஆஸ்பத்திரியில் துணை முதல்வர் வருகையை ஒட்டி எம்எல்ஏ காந்திராஜன் தலைமையில் பந்தல் அமைக்கும் பணிக்கான கால் கோல் நடும் பணி
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் 9 அமைச்சர்கள் வேடசந்தூர் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வீராசாமிநாதன் மகனின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். அன்றைய தினம் வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் 7 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளார். அவர் வருகையை ஒட்டி வேடசந்தூர் எம்எல்ஏ காந்திராஜன் தலைமையில் பந்தல் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை மற்றும் கால் கோள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.