கொடைக்கானல்: ஒற்றைக் காட்டு யானை சுற்றித் திரிவதால் சுற்றுலாப் பயணிகள் பேரிஜம் ஏரிக்கு செல்ல தடை
கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் வன சுற்றுலாத்தலமான பேரிஜம் பகுதிக்கு சென்று அங்குள்ள அமைதி பள்ளத்தாக்கு தொப்பி தூக்கும் பாறை, மதிக்கட்டான் சோலை, பேரீச்சம் ஏரி போன்ற இயற்கை அழகை கண்டு ரசித்து வருவது வழக்கமான ஒன்றாகும்.இந்நிலையில் பேரிஜம் ஏறிப் பகுதியில் சுற்றி திரிந்த ஒற்றைக் காட்டு யானை பேரிஜம் ஏரியில் நீர் அருந்தி பேரிஜம் ஏரி பகுதியில் சுற்றித் திரிவதால் பேரிஜம் ஏரிப் பகுதிகளுக்கு செல்வதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது