திண்டுக்கல் மேற்கு: சனி, ஞாயிறு SIR சிறப்பு முகாம்கள் ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான சரவணன் ஆட்சியரகத்தில் பேட்டி
வாக்காளர்கள் படிவங்களைப் பூர்த்தி செய்வதில் எந்தவித அச்சமும், தயக்கமும் கொள்ளத் தேவையில்லை. மிகவும் எளிமையான அடிப்படைத் தகவல்கள் மட்டுமே கேட்கப்படுகிறது. வரும் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் (சனி, ஞாயிறு) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி படிவங்களை ஒப்படைக்கலாம். புதிய வாக்காளர் சேர்ப்பு மற்றும் திருத்தங்களையும் மேற்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்