வத்தலகுண்டு அருகே அய்யம்பாளையத்தில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களின் 73 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 13-ம் ஆண்டு மாநில அளவிலான இரட்டை மாட்டுவண்டி பந்தையம் நடைபெற்றது, இதில் மதுரை, புதுக்கோட்டை, நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம், கோவை, தஞ்சை, திருச்சி, நாகப்பட்டினம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 80-க்கும் மேற்பட்ட ஜோடிமாட்டு வண்டிகள் கலந்துகொண்டன பரிசுகளை பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ பி செந்தில் குமார் வழங்கினார்