வண்டலூர்: ஜி எஸ் டி சாலையில் பாட்டாளி தொழிற்சங்கம் சார்பில் ஆயுதபூஜை விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் ஜி எஸ் டி சாலையில் பாட்டாளி தொழிற் சங்க கௌரவ தலைவர் ஏழுமலை, தொழிற்சங்க தலைவர் பெரியசாமி, தொழிற்சங்க செயலாளர் தமிழரசன், பொருளாளர் சத்யராஜ், தலைமையில் ஆயுதபூஜை விழா மிக சிறப்பாக நடைபெற்றது,இதில் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வன்னியர் சங்க மாநில செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சால்வை அணிவித்து பரிசுகள் வழங்கினார்,