பாளையங்கோட்டை: கேடிசி நகர் கவின் கொலை வழக்கு சுர்ஜித் பெரியம்மா மகன் ஜாமீன் மனு .நெல்லை மாவட்ட 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தள்ளுபடி
கேடிசி நகரில் கடந்த ஜூலை 27 ஆம் தேதி கவின் என்பவர் ஆணவ படுகொலை செய்யப்பட்டதை அடுத்து நெல்லை மாவட்ட இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது . கைது செய்யப்பட்டுள்ள சுர்ஜித் பெரியம்மா மகன் ஜெயபால் ஜாமீன் கேட்டு மனு அளித்திருந்தார் வழக்கு நேற்று இரவு 7 மணி அளவில் நெல்லை மாவட்ட 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் ஜாமீன் மனுவை நீதிபதி ஹேமா தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.