திருப்பத்தூர்: திருப்பத்தூரில் 1.30 மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கிய கன மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி! வாகன ஓட்டிகள் அவதி
திருப்பத்தூரில் 1.30 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த ஒரு மாதமாக கடுமையான வெப்பம் நிலவிய நிலையில், கடந்த இரு நாட்களாக மாவட்டத்தில் நல்ல மழை பெய்கிறது. இன்று இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். இருப்பினும், தொடர்ந்து பெய்யும் மழையால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்