பல்லடம்: ராம் நகர் பகுதியில் தனியார் நிறுவனத்தின் முன் பகுதியில் இருந்த மின்னணு மற்றும் இரும்பு பொருட்கள் திருடிய 7 பெண்கள் கைது
திருப்பூர் ராம்நகர் முதல் வீதியைச் சேர்ந்த ரகுபதி என்பவர் தனியார் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம் வைத்து நடத்தி வருகிறார். இவர் வெளியூர் சென்று இருந்த நிலையில் கடந்த 13ஆம் தேதி இவரது நிறுவனத்திற்கு வெளியே வைத்திருந்த மின்னணு மற்றும் இரும்பு பொருட்கள் திருடப்பட்டிருந்தது. இது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் 7 பெண்களை திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்