அயப்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் உரிமைத்தொகை வழங்க கோரி 1800 பெண்கள் மனு அளித்த நிலையில் அங்குள்ள பெண்களின் வங்கி கணக்குகளில் காலை முதலே உரிமைத் தொகை பணமான ஆயிரம் ரூபாய் வரத் துவங்கியது. இதை அடுத்து அயப்பாக்கம் பூங்கா அருகே இன்று மாலை ஒன்று திரண்டிய பெண்கள் கையில் ஆயிரம் ரூபாயுடன், பட்டாசு வெடித்து முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.