வேடசந்தூர்: பஸ் நிலையம் முன்பாக உள்ள பெரியார் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
வேடசந்தூர் பஸ் நிலையம் முன்பாக தந்தை பெரியாருக்கு முழு உருவச்சிலை வைக்கப்பட்டுள்ளது. அவரின் 147 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வேடசந்தூர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் வெற்றிச்செல்வன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய துணைச் செயலாளர் விடுதலை வளவன், வேடசந்தூர் பேரூர் பொறுப்பாளர் அப்துல் சத்தார், புரட்சி பாடகர் தமிழழகன், ஒன்றிய துணை செயலாளர் குடப்பம் சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.