ஆத்தூர்: வாக்குச் சாவடி முகவர்கள் மாற்றுக் கட்சியினரின் சூழ்ச்சிக்கு இடம் அளிக்காமல் பணியாற்ற வேண்டும் சின்னாளபட்டியில் திமுக தேர்தல் பொறுப்பாளர் வேண்டுகோள்
Attur, Dindigul | Sep 14, 2025 ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்னாளபட்டி சமுதாய கூடத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு ஆத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் பிள்ளையார் நத்தம் முருகேசன் தலைமை தாங்கினார் சிறப்ப அழைப்பாளர்களாக கலந்து கொண்ட மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசும்போது வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோகமாக வெற்றி பெற்று கழகத்தலைவரை மீண்டும் முதல்வராக்க அயராது உழைக்க வேண்டும் என பேசினார்