கொடைக்கானல்: வத்தலக்குண்டு பிரதான மலை சாலையில் கடும் பனிமூட்டம் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி ஊர்ந்து செல்லும் வாகனங்கள்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில தினங்களாகவே அதிக பனி மூட்டத்துடன் கூடிய சாரல் மழை மற்றும் கன மழை பெய்து வந்த நிலையில் கொடைக்கானல் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று கொடைக்கானல் வத்தலகுண்டு பிரதான மலைச்சாலையில் கடும் பணி முட்டம் சூழ்ந்த காரணத்தால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் வாகனத்தின் முகப்பு விளக்கை எரிய விட்டபடி வாகனங்களை இயக்கி வருகின்றனர்.