காளையார்கோவில்: கொல்லங்குடி அருள்மிகு ஶ்ரீ வெட்டுடையார் காளியம்மன் திருக்கோவில் தீர்த்த வாரி வைபவம்- அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு
சிவங்கை மாவட்டம் கொல்லங்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஶ்ரீ வெட்டுடையார் காளியம்மன் திருக்கோவிலில் பங்குனி சுவாதி விழாவின் நிறைவாக தீர்த்தவாரி வைபவம் நடைபெற்றது, ஏராளமான பக்தர்கள் புனித நீராடி அம்மனை வழிபட்டனர்,அம்மனின் சூலத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தி பல்வேறு நறுமணத் திரவியங்கள் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்று கலசத்தில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது,மாலையில் வெட்டுடையார் காளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது