திருப்பத்தூர்: திருப்பத்தூரில் திடீரென உருவான ஓடை-ஆர்பரித்தபடி அருவி போல் சாக்கடையில் கலக்கும் காவேரி கூட்டு குடிநீர்,அருவியாக மாறிய காவிரி கூட்டு குடிநீர்!
திருப்பத்தூர் புதுத்தெருவில் காவிரி கூட்டு குடிநீர்குழாய் உடைப்பால், 20 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் ஆறு போல ஓடி, சாக்கடையில் கலக்கிறது. பழைய குழாய்கள் அடிக்கடி சேதமடைவதால், குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் அவதிப்படுகின்றனர். உடைப்பால் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகிறது. அதிகாரிகள் ஆய்வு செய்து, குழாய் பராமரிப்பை மேம்படுத்தி, உடைப்பை தடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.