ஆற்காடு: ஆற்காட்டில் ஓரணியில் தமிழ்நாடு செயலி மூலம் திமுக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்- சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு
Arcot, Ranipet | Jul 5, 2025 ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகரில் ஓரணியில் தமிழ்நாடு செயலி மூலம் திமுக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. முகாமில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் J.L.ஈஸ்வரப்பன் கலந்து கொண்டு வீடு வீடாக சென்று தமிழ்நாடு அரசின் கடந்த நான்காண்டு கால சாதனைகளை எடுத்துக் கூறி பொதுமக்கள் தங்களை திமுகவில் இணைத்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இந்த நிகழ்வில் திமுக முன்னணி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.