மயிலாடுதுறை: கடும் பனிப்பொழிவு - சம்பா நெற்பயிரில் சோலை பூச்சி, குருத்துபூச்சி தாக்குதல் அதிகரிப்பு, மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம் மசூல் பாதிப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டு சுமார் ரெண்டு லட்சத்து முப்பதாயிரம் ஏக்கர் பரப்பளில் நடவு, நேரடி நெல் விதைப்பு, திருந்திய நெல் சாகுபடி முறையில் சம்பா,தாளடி சாகுபடிக்கு ஏற்ற நெல் ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி தாலுகா பகுதிகளில் சம்பா, தாளடி சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அக்டோபர் மாதத்தில் பருவமழையும் முறையாக பெய்யாத நிலையில் பயிர்கள் செழிப்பின்றி பூச்சிதாக்குதல்கள் காணப்படத்தொடங்கியது. கடந்த மாத இறுத