கோவை வடக்கு: கோவை அல்வேர்னியா பள்ளி அருகே லாரியில் இருந்து சாக்கடையில் கழிவுநீர் வெளியேற்றம்!
கோவை திருச்சி சாலை அல்வேர்னியா பள்ளி அருகே செப்டிக் டேங்க் லாரியில் இருந்து கழிவுநீர் நேரடியாகச் சாக்கடையில் திறந்து விடப்பட்டது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்குப் புகார் தெரிவித்துள்ளனர்.