ஸ்ரீவைகுண்டம்: பொட்டலூரணி கிராமத்தில் சாலை மறியல் நடத்தியவர்கள் ஜாமீனில் விடுதலை பட்டாசு வெடித்து கொண்டாடிய ஊர் மக்கள்
தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி கிராமத்தில் கழிவு மீன் ஆலைகளை ஆலைகளை மூடக்கோரி ஓராண்டுக்கு மேலாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந் நிலையில் கடந்த மாதம் 21 ஆம் தேதி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை போலீசார் கைது செய்தனர். இதில் ஜாமீனில் வெளிவந்தவர்களுக்கு கிராம மக்கள் பட்டாசு வெடித்து வரவேற்பு அளித்தனர்.