பெரம்பூர்: ஓட்டேரி பட்டாளம் பகுதியில் கே எம் கார்டன் பகுதியில் 7 நாட்களாக கழிவுநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் கழிவு நீரில் நின்று சாலை மறியல்
சென்னை ஓட்டேரி பட்டாளம் கே எம் கார்டன் பகுதியில் 7 நாட்களாக கழிவு நீர் தேங்கி நிற்பதால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மழை நீரோடு கழிவு நீரும் கலந்துள்ளதால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல இயலாமல் தொற்று நோய் பரவும் அபாயத்திற்கு ஆளாகி இருப்பதாக கூறி ஐம்பதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் கழிவு நீரில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்