பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டில் திமுக கவுன்சிலர் எஸ்.ஐ.ஆர் படிவம் வழங்கியதால் அதிமுக முன்னால் அமைச்சர் தட்டி கேட்டு வாக்குவாதம்
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பேரூராட்சி 9-வது வார்டு பகுதியில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா மற்றும் அதிமுக தேர்தல் பொறுப்பாளரும் முன்னாள் எம்பியுமான எஸ்,ஆர்.விஜயகுமார் ஆகியோர் இன்று காலை எஸ்ஐஆர். சரிபார்ப்பு பணிகளை பார்வையிட சென்றனர். பிஎல்ஓ வாக போடப்பட்டுள்ள ஜெயந்தியின் கணவர் திமுக கவுன்சிலர் அத்தகைய படிவத்தை வைத்திருந்ததை அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா கேட்டு வாக்குவாதம் செய்தார்