தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் 2025-ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடங்களுக்கு தேர்வு நத்தம் NPR கல்லூரி, SSM கல்லூரி, PSNA கல்லூரி மற்றும் GTN கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்த எழுத்துத் தேர்வில் 5826 ஆண் எழுத்து தேர்வாளர்களும், 1650 பெண் எழுத்து தேர்வாளர்களும், மொத்தம் 7476 போட்டித் தேர்வாளர்கள் விண்ணப்பித்திருந்தனர் இதில் 6593 பேர் தேர்வு எழுதினர் 883 பேர் தேர்வு எழுத வரவில்லை