ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத சட்டத்தை கண்டித்து திண்டுக்கல்லில் அனைத்திந்திய காப்பீட்டு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, கிளைச் செயலாளர் ஜான்சன் தலைமை வகித்தார். கிளைத் தலைவர் தங்கவேல் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தென்மண்டல துணைத்தலைவர் வாஞ்சிநாதன் கோரிக்கை விளக்கவுரை நிகழ்த்தினார்.