பொன்னேரி: சோழவரம் அலமாதியில் 17 வயது சிறுவன் வீட்டில் கழுத்து அறுத்து கொடூர கொலை
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அலமாதி தீரன் சின்னமலை தெருவை சேர்ந்தவர் பாபு (17). கடந்த சில நாட்களுக்கு முன் பாபுவின் பெற்றோர் உறவினர் வீட்டிற்கு சென்று இருந்த நிலையில் பாபு மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். நேற்று இரவு முதல் பாபுவின் சகோதரர் தொலைபேசியில் அழைத்தபோதும் அதற்கு பதில் அளிக்காததால் இன்று மாலை தனது நண்பரை அனுப்பி பார்த்த போது. வீடு பூட்டி இருந்த நிலையில் வீட்டின் பூட்டை உடைத்து பார்த்தபோது 17 வயது சிறுவனான பாபு கை, கால்கள் கட்டப்பட்டு கட்டிலில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக இருந்தார்