வேடசந்தூர்: ஸ்ரீராமபுரம் ஊராட்சி பகுதிகளில் விவசாய தோட்டத்தில் மின்வயர்கள் திருட்டு
வேடசந்தூர் சுற்றுப்புற கிராம பகுதிகளில் தொடர்ச்சியாக விவசாய தோட்டங்களில் உள்ள மின்வயர்கள் திருடப்பட்டு வருவது தொடர் கதையாக உள்ளது. இந்த நிலையில் ஸ்ரீராமபுரம் ஊராட்சி எஸ்.புதூர் பகுதியில் 7 விவசாய கிணறுகளில் இரவு நேரத்தில் புகுந்த மர்ம நபர்கள் மின் கம்பத்தில் ஏறி அங்கிருந்து மின் வயர்களை மின் மோட்டாருக்கு செல்லும் வரை வெட்டி எடுத்து சென்றுள்ளனர். இதனால் மின்மோட்டாரை இயக்க முடியாமல் விவசாய தோட்டத்தில் குடியிருக்கும் விவசாயிகள் குடிக்க தண்ணீர் இல்லாமலும், கால்நடைகளுக்கு தண்ணீர் இல்லாமலும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.