ஒட்டன்சத்திரம்: கேதையுறும்பு, தும்மலப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் 110/22 கி.வோ துணை மின்நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் தலைமையில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட கேதையுறும்பு, தும்மலப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் 110/22 கி.வோ துணை மின்நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் பழனி வருவாய் கோட்டாட்சியர் கண்ணன், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் சஞ்சைகாந்தி, திண்டுக்கல் மேற்பார்வை பொறியாளர் சாந்தி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.