திண்டுக்கல், புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் ஆஞ்சிலாமெர்சி தலைமையிலான குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது செட்டிநாயக்கன்பட்டி அருகே மாடுதண்ணி குளத்தில் ஜேசிபி மூலம் டிப்பர் லாரியில் அனுமதி இன்றி மண் அள்ளியவர்கள் இவர்களை கண்டதும் தப்பி ஓடினார்கள் அதில், மல்வார்பட்டி, சிக்கையகவுண்டனூரை சேர்ந்த முனியாண்டி மகன் முத்துராஜ் என்பவரை பிடித்து ஜேசிபி, டிப்பர் லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்து தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்