பெரம்பலூர்: கொளத்தூரில் லாரி டிரைவர் கொலை வழக்கில் ஒருவர் கைது
பெரம்பலூர் அருகே ஆலத்தூர் தாலுகா கொளத்தூரில் பெட்டிக்கடையில் சட்டவிரோதமாக டாஸ்மாக் மது பாட்டில்கள் விற்றவரிடம் ஓசியில் மதுபாட்டில் கேட்டு மிரட்டிய லாரி டிரைவர் சுரேஷ் என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக மருவத்தூர் போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர், இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக பிலிமிசையை சேர்ந்த அறிவழகன்( 33) என்பவரை போலீசார் கைது செய்தனர்