செங்கோட்டை: திருமலை முருகன் ஆலயத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கிரிவலப் பாதை பணிகள் துவக்கம்
தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா பண்பொழி கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு திருமலை முருகன் ஆலயம் இந்த ஆலயத்திற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்து குவிந்த வண்ணம் உள்ளனர் இதன் தொடர்ச்சியாக மலைக் கோவிலுக்கு வரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு கிரிவலைப்பாதை அமைக்கும் பணிகளுக்காக 2 கோடி இந்து சமய அறநிலை துறை சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் அதன் பணியின் துவக்க விழா நடைபெற்றது