மணப்பாறை: மணப்பாறையில் சரித்திர பதிவேடு குற்றவாளி விபத்தில் சிக்கி உயிரிழப்பு
திருச்சி மணப்பாறை கரும்புள்ளி பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். இவர் மணப்பாறை காவல் நிலையத்தில் சரித்திர ரவுடி பட்டியலில் உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் அவரது டூவீலரில் மணப்பாறை அடுத்த போத்த மேட்டுப்பட்டி பாலத்தில் வேகமாக சென்று கொண்டிருந்தார் அப்போது சாலையோர பாலத்தின் சுவரில் மோதி பலத்த காயமடைந்து மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சொல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்