திண்டுக்கல் மேற்கு: மேற்கு தொடர்ச்சி மலையில், மலை பன்றிகள் வேட்டையாடிய 14 நாய்களுடன் 14 பேர் கைது. 2 லட்சத்தி 30 ஆயிரம் அபராதம் வனத்துறையினர் நடவடிக்கை
திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அடுத்த, மேற்கு தொடர்ச்சி மலை கிராம பகுதிகளில் தொடர்ந்து வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கன்னிவாடி வன சரகம் குட்டத்துப்பட்டி கிராமத்திற்கு உட்பட்ட வெயிலடிச்சான்பட்டி பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளத்தில் லாரியில் பதுங்கி இருந்த நபர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். 14 பேர் வேட்டையாடிய, 4 மலை பன்றிகள் மற்றும் 14 நாய்களுடன் கைது செய்தனர்.